இலங்கை செய்திகள்

நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைப்பு

நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைப்பு

இன்று (01) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 4.24  சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆரம்ப கட்டணம் 27 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Back to top button