கலை, கலாசாரம்

நடிகர் விஜய் இன் கட்சிக்கொடியில் இடம்பிடித்த தமிழீழ தேசிய மரத்தின் வாகைப்பூ!

[ad_1]

நடிகர் விஜய் இன் தமிழக வெற்றிக்கழக கொடியில் தமிழீழ தேசிய மரமான வாகை மரத்தின் பூ இடம்பிடித்துள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது.

சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் இடம்பெற்ற என தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கீழும் அடர்சிவப்பு நிறம் இருக்க, நடுவில் மஞ்சள் நிறத்துடன் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் கொடியின் நடுவில் இருபக்கமும் போர் யானை இருக்க, நடுவில் வட்ட வடிவில் வெற்றியை குறிக்கும் வாகை மலர் நட்சத்ரங்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் இருக்கும் வகையில், ‘தமிழ் கொடி பறக்குது… தலைவன் யுகம் பிறக்குது” என தொடங்கும் கொடிப் பாடல் வெளியாகியுள்ளது.

[ad_2]
Lankafire

Back to top button