தேர்தல் துண்டுப் பிரசுரத்தை ஏற்க மறுத்த இளைஞன் மீது தாக்குதல்!

[ad_1]
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, தேர்தல் துண்டுப் பிரசுரத்தை ஏற்க மறுத்த இளைஞன் உள்ளூர் கடை உரிமையாளர் ஒருவரின் மகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15-09-2024) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் கடையின் உள்ளே இருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூண்டு பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரின் மகனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஆதரவாளர்கள் குழுவுடன் அந்த கடைக்கு சென்று மேற்படி இளைஞனிடம் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் அதனை வாங்க மறுத்ததால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுதோடு, வைத்தியசாலையில் பொலிஸாரிடம் முறைப்பாட்டை வழங்கிய பின்னர் இன்று (16) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.
Lankafire







