கலை, கலாசாரம்

நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய!

[ad_1]

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளம் சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்து கோட்டாபய ராஜபக்ச நேபாள தலைநகரை திங்கட்கிழமை வந்தடைந்தார் என அந்த நாட்டின் செய்திகள் தெரிவித்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ச நேபாளத்தில் பௌத்தமதத்துடன் தொடர்புள்ள பகுதிகளிற்கு செல்லதிட்டமிட்டுள்ளார் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் பல முதலீடுகளை செய்துள்ள நேபாளத்தின் சௌதாரி குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு நெருங்கிய தொடர்புள்ளது,அவர்கள் அவரை நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ள.

இது தனிப்பட்ட விஜயம் என்றும் அரசியல் நோக்கம் கொண்டதில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[ad_2]
Lankafire

Back to top button