கலை, கலாசாரம்
தேராவில் துயிலுமில்லத்தில் பொதுமக்கள்..! மாவீரர் நாளுக்கான பணி முன்னெடுப்பு…
தேராவில் துயிலுமில்லத்தில் பொதுமக்கள்..! மாவீரர் நாளுக்கான பணி முன்னெடுப்பு...

தேராவில் துயிலுமில்லத்தில் பொதுமக்களால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அதன்பின்னர் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தில் இன்று10.11.2024 மாவீரர் நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து சிரமதான பணியில் முன்னெடுத்திருந்தனர்.
எதிர்வரும் 21. 11.2024 மாவீர வாரம் ஆரம்பமாகும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றவை குறிப்பிடத்தக்க விடயமாகும்.








