இலங்கை செய்திகள்

தேரரின் கண்முன் நடந்த கொடூரம்..! நடந்தது என்ன?

தேரரின் கண்முன் நடந்த கொடூரம்..! நடந்தது என்ன?

தேரரின் கை கால்கள் கட்டப்பட்டு அவரது கண்முன்னே கொள்ளை சம்பவமொன்று நடந்துள்ளது.

கம்பஹா, திவுலப்பிட்டிய, ஹப்புவலான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (02) அதிகாலை தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்துவிட்டே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இனங்காணாத இருவர் அங்கிருந்த தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு விகாரையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

தேரரின், கொடூரம், நடந்தது, பொலிஸார்

கொள்ளையிட்ட பணத்தின் மொத்த பெறுமதி 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button