இலங்கை செய்திகள்
தேசிய மக்கள் சக்தியின் முதலாவது அமைச்சரவை தீர்மானங்கள் நாளை அறிவிக்கப்படும்.

இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை செவ்வாய்க்கிழமை (01) நடைபெறவுள்ளது. அதில் அமைச்சரவையின் ஆரம்ப தீர்மானங்களை அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.








