கலை, கலாசாரம்

துன்ஹிந்த பகுதியில் கோர விபத்து!

துன்ஹிந்த பகுதியில் கோர விபத்து!

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (01) காலை 7.45 மணியளவில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த 35 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துன்ஹிந்த பகுதியில் கோர விபத்து

இந்த விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Back to top button