இலங்கை செய்திகள்
Trending

ஹோட்டலில் மாட்டிய  தேர்தல் கால கையூட்டு பொருட்கள்!

அல்லிராஜா வின் புள்ளி இராஜாக்களின் திரு விளையாட்டு அம்பலம்.

ஹோட்டலில் மாட்டிய  தேர்தல் கால கையூட்டு 

அல்லிராஜா வின் புள்ளி இராஜாக்களின் திரு விளையாட்டு அம்பலம்.

வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மக்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் அலுவலகமாக இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது.

மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட அரிசி மக் ஹீட்டர்கப் பவர் பேங்க் போன்ற பொருட்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெள்ளவத்தை காவற்துறை அதிகாரிகளின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Back to top button