கலை, கலாசாரம்

திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் இடைநிறுத்தப்பட்ட உயர்தர பெறுபேறுகள் வெளியீடு !

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

, திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் இடைநிறுத்தப்பட்ட உயர்தர பெறுபேறுகள் வெளியீடு !

Back to top button