கலை, கலாசாரம்

திருகோணமலை ஊடகவியலாளர் மீது சிலர் தாக்குதல்

திருகோணமலை ஊடகவியலாளர் மீது சிலர் தாக்குதல்

திருகோணமலை ஊடகவியலாளரான அப்துல் சலாம் யாசீம் என்பவர்மீது சிலர் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று தற்போது கசிந்துள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குறித்த ஊடகவியலாளரிடம் வினவியபோது தன்னால் வெளியிடப்பட்ட சில உண்மைச் செய்திகளின் பின்னனியிலேயே சிலரினால் குறித்த தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சட்டவிரோத செயற்பாடுகளில் சில உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக செய்திகளை தான் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்ததாகவும் இதனால் அவர்கள் தன்னை சிலரை வைத்து தாக்கியதாகவும் அவர்களுக்கும் தாக்கியவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அந்த காட்சியில் தாக்குதலுடன் தொடர்புடைய உயர் அதிகாரியின் உருவமும் தற்செயலாக பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை

இன்றைய ஆட்சியில் இதுபோன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருக்கின்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

https://chat.whatsapp.com/IaW29YfPY4m1BVoJf6HtuM

Back to top button