கலை, கலாசாரம்

மஸ்கெலியா டஸ்பி சாமிமலை ஆணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா டஸ்பி சாமிமலை தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை(26) மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 40 வயதுடைய குமாரவேல் சுப்பிரமணியம் இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்து  50  மீற்றர் தூரத்தில் தொலைவிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல உள்ள நிலையில்  இது தொடர்பான மேலும் விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Back to top button