கலை, கலாசாரம்

தயாசிறி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு, கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தன்னை நீக்குவதற்கு எதிராக தயாசிறி ஜயசேகர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த அந்த மனுவை பரிசீலித்த, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

, தயாசிறி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !

Back to top button