இலங்கை செய்திகள்

தமிழர்களை ஒதுக்கிய முடிவின் தாக்கம்: கோட்டாபயாவின் அனுபவம் -சிறீதரன்

தமிழர்களை ஒதுக்கிய முடிவின் தாக்கம்: கோட்டாபயாவின் அனுபவம் -சிறீதரன்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(3) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,“ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.

தமிழர்களை ஒதுக்கிய முடிவின் தாக்கம்: கோட்டாபயாவின் அனுபவம் -சிறீதரன்

யுத்தம் காரணமாக வாங்கிய கடன்கள் காரணமாகவே நாடு இவ்வாறு வங்ரோத்தடைந்துள்ள நிலையில் ஐனாதிபதி அதனை மறைப்பது, வருத்தமளிப்பதாக உள்ளது.

இதேபோலவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சிங்களவர்களால் நடத்தப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், இந்த அரசாங்கத்தோடு கைகோர்த்து பயணிக்க தயாராகவுள்ளோம்.

2/3 பெரும்பாண்மையை பெற்றுள்ள இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு தரப்போகின்றது?” என வினவியுள்ளார்.

Back to top button