கலை, கலாசாரம்

தப்பிச் சென்று சரணடைந்த நபர் !

கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று காணாமல் போனதாக தேடப்பட்ட குறித்த நபர் வெட்டுக்காயங்களுடன் அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்ததுடன், வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, குறித்த நபர் தப்பி சென்ற வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிசார் சாட்சியங்களை பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

, தப்பிச் சென்று சரணடைந்த நபர் !

Back to top button