தனியார் பேருந்து மீது மோதிய அரச பேருந்து… 47 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

[ad_1]
பிபிலவின் நாகல என்ற இடத்தில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்றிரவு (05-09-2024) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகல பிரதேசத்தில் பிபில – அம்பாறை வீதியில் பிபிலையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் பின்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த தனியார் பேருந்து ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செAll Postsன்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து பல பயணிகளை இறங்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்திய போது, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அதிவேகமாக அதன் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இரு பேருந்துகளிலும் இருந்த 47 பயணிகள் காயமடைந்து பிபில மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Lankafire








