தடை செய்யப்பட்ட விவசாய பொருட்கள் கடற்படையால் மீட்பு !

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பெருந்தொகை விவசாய இரசாயன பொருட்கள், கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் (05) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர், ஏத்தாளை எரம்புகொடல்ல கடல் பிரதேசத்தில் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, இந்தியாவிலிருந்து இயந்திரப் படகு மூலம் ஏத்தாளை கடற்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட இரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில்,இவற்றை எடுத்துச் செல்ல முற்பட்ட போதே,கடற்படையினரால் இவ்விரசாயன பொருட்கள் பறிமுதலாகின.
இதன்போது, 31 மூடைகளில் அடைக்கப்பட்ட இரசாயன மருந்துகள், கிருமிநாசினிகள், களை நாசினிகள் மற்றும் நாட்டில் தடை செய்யப்பட்ட இரசாயன உர வகைகளும் மீட்கப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட விவசாய இரசாயன பொருட்களை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
, தடை செய்யப்பட்ட விவசாய பொருட்கள் கடற்படையால் மீட்பு !







