கலை, கலாசாரம்

தங்க நகை அடகு வைத்த குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகை !

2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மினிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

23. வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை வழங்குதல்

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்து பிரிவுகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதகமான தாக்கத்துக்கு உள்ளானார்கள். அதன் விளைவாக தங்க நகைகளை அடகு வைத்தல் வேகமாக அதிகரித்துள்ளது. 2019 ஆண்டில் ரூபா 210 பில்லியன் அளவிலிருந்த அடகு முற்பண நிலுவைத் தொகை 2024 ஆண்டு மார்ச் மாதமளவில் 571 பில்லியன் வரை அதிகரித்து 172% அதிகரிப்பை காட்டியுள்ளது.

குறித்த நிலையை கருத்திலெடுத்து உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, வாடிக்கையாளர்கள் தனிநபர் அடிப்படையில் 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

, தங்க நகை அடகு வைத்த குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகை !

Back to top button