கலை, கலாசாரம்

தங்கத்தின் விலை அதிகரிப்பு !

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இன்றைய தினம் (19) தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 192,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 177,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

, தங்கத்தின் விலை அதிகரிப்பு !

Back to top button