கலை, கலாசாரம்

டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து :ஒருவர் பலி ! இருவர் படுகாயம் !

மொனராகலை – படல்கும்புர வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.டிப்பர் வாகனமொன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதியும் டிப்பர் வாகனத்தின் சாரதியும் படுகாயமடைந்துள்ளனர். 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

, டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து :ஒருவர் பலி ! இருவர் படுகாயம் !

Back to top button