ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கரம்..! பலர் பலி…
ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கரம்..! பலர் பலி...

ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் திரளான மக்கள் கூட்டம் மீது சாரதி ஒருவர் வாகனத்துடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஜேர்மனியில் நடந்த குறித்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 11 கொல்லப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கரம்… மாகாண அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி | German Christmas Market Driver Ramming
தொடர்புடைய தாக்குதாரி பொலிசாரிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Saxony-Anhalt மாகாண முதல்வர் தெரிவிக்கையில், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இளம் வயது சிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இது மாக்டேபர்க் நகரத்திற்கும், மாகாணத்திற்கும் பொதுவாக ஜேர்மனிக்கும் பெருந்துயரமாகும் என்றார். மட்டுமின்றி, சிலர் பலத்த காயங்கலுடன் தப்பியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிசாரிடம் சிக்கிய தாக்குதல்தாரி சவுதி அரேபிய நாட்டவரான 50 வயதுடைய மருத்துவர் என்றும், ஜேர்மனியில் அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர் என்றும் Haseloff தெரிவித்துள்ளார்.
மாக்டேபர்க் நகரத்தில் அந்த நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருவதாகவும் முதல்வர் Haseloff தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் வேறு அசம்பாவிதம் ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்றே அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.