கலை, கலாசாரம்

பாண்டிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்.!!

அம்பாறை பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் (12)  முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

கல்முனை பாண்டிருப்பு 2A பிரிவில் பிரதேச கடற்கரையிலையே குறித்த சடலம் கரையொதிங்கியுள்ளது.

இன்று திங்கட்கிழமை மாலை வேளையில் குறித்த சடலம் அங்குள்ள இளைஞர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவர் யார் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பான தகவல்கள் எவருக்கும் தெரியவில்லை. சடலம் யாருடையது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

போலீசார் இது பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கோண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Back to top button