கலை, கலாசாரம்
Trending
சுன்னாகம் பகுதியில் காவல்துறையின் அராஜகம் – கைக்குழந்தையை வீசி கொடுமை
சுன்னாகம் பகுதியில் காவல்துறையின் அராஜகம் - கைக்குழந்தையை வீசி கொடுமை

சுன்னாகம் பகுதியில் காவல்துறையின் அராஜகம் – கைக்குழந்தையை வீசி கொடுமை இன்று சனிக்கிழமை இரவு சுன்னாகம் பகுதியில் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனம் ஒன்றில் கைக்குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரை சிவில் உடையில் வந்த போலீசார் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலீசார் அவர்கள் பயணித்த வாகனத்தில் குடிபோதையில் மோதியுள்ளதுடன் வேண்டும் என்றே அவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இளம் தம்பதியினரின் கைக்குழந்தையை வீசி எறிந்ததுடன் தாய் மற்றும் அவரது கணவன் உட்பட அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குழந்தையின் தாய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான காணொளி தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








