இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது!

போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது!

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11)  கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் நீதிமன்றில் கடமையாற்றும் 42 வயதுடைய சட்டத்தரணி ஆவார்.

போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேக நபரிடமிருந்து 02 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button