இலங்கை செய்திகள்

சுகபோக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி?முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆப்பு..!

சுகபோக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி?முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆப்பு..!

சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக நாங்கள்  அரசியலுக்குள் வரவில்லை  என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகபோக, வாழ்க்கைக்கு, முற்றுப்புள்ளி, ஜனாதிபதிகளுக்கு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் இதர சிறப்புரிமைகளையும் குறைப்பதாக நாம் கூறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை சலுகைகளை இரத்துச் செய்வதாகவே கூறியிருந்தோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்வது தொடர்பான பிரேரணை எதிர்வரும் வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

சுகபோகமாக வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தங்குவதற்காக அவர்களுக்கு மாதிவெல குடியிருப்பு தொகுதியில் வீடுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Back to top button