கலை, கலாசாரம்

சீரற்ற வானிலை : 21 பேர் பலி !

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” கடந்த சில நாட்களாக நீடித்த சிரற்ற காலநிலையால் 53,289 குடும்பங்களைச் சேர்ந்த 202,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் 132 பாதுகாப்பு நிலையங்களில் 2,057 குடும்பங்களைச் சேர்ந்த 9,313 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4,070 குடும்பங்களைச் சேர்ந்த 15,301 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காணமற் போயுள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

, சீரற்ற வானிலை : 21 பேர் பலி !

Back to top button