கலை, கலாசாரம்

பசும்பால் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து கால்நடைகள் இலங்கைக்கு !

இலங்கைக்கு கால்நடைகளை வழங்க இந்தியாவும் பாகிஸ்தானும் இராஜதந்திர மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளன.இலங்கையில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அதிகளவான பாலை பெறக்கூடிய பசுக்கள் இல்லாதது இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையின் பசும்பால் உற்பத்தி தொழிலை மேம்படுத்துவதற்காக பசுக்களை வழங்குவதற்கு குறித்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற பசுக்கள் மற்றும் எருமைகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டுமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய அரசு, சாஹிவால் என்ற வகை பசு மாடுகளையும், பாகிஸ்தான் , முரா என்ற வகை எருமை மாடுகளையும் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அந்த திட்டங்கள் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

, பசும்பால் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து கால்நடைகள் இலங்கைக்கு !

Back to top button