கலை, கலாசாரம்

சினிமாவில் மட்டுமா பாலியல் தொல்லை நடக்கிறது? – குஷ்பு

[ad_1]

சென்னை கிண்டியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினர் குஷ்பு சுந்தர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி மற்றும் மூத்த மருத்துவர் சுதா ஷேசையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம் மலையாள திரையுலகில் பெரியளவில் சர்ச்சையாகியிருக்கும் பாலியல் தொல்லை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர் பேசுகையில்,

Kushbu speaking addressing the press

“எனக்கு அது போன்ற தொல்லைகள் சினிமா துறையில் எதுவும் நடந்ததில்லை. நான் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறேன். அதுமட்டுமன்றி நாட்டில் எல்லா துறைகளிலும்தான் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. அனைத்து துறைகளிலும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும். ஆனால், அது எதிலும் கேட்காமல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல் சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள் சிலர். அது ஏன்?

ஏன் சினிமாதுறையில் மட்டும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும்? பெண்கள் பணியாற்றக்கூடிய ஒவ்வொரு துறையிலும் ஹேமா கமிட்டி போல் ஒன்று இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி என தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு பாதுகாப்பு குழு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ் நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை வந்து புகார் தெரிவிக்கவில்லை. அவர்களை யார் தடுக்கிறாராகள்?

ஒரு நடிகை ஒருவர் மீது பாலியல் புகார் கொடுக்கும் போது அவர் யாராக இருந்தாலும் அந்த நபருக்கு வார்னிங் கொடுக்கப்படும். அதன் பிறகு விசாரணை கமிட்டி அமைத்து தொடர்ந்து பேசப்படும். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தமாக ஏழு தீர்மானங்கள் உள்ளன. எங்களிடம் வந்து பேசுங்கள். உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் நாங்கள் இங்கு உள்ளோம்.

இதற்காகதான் விசாகா கமிட்டி மற்றும் நடிகர் சங்கம் உள்ளது. இல்லை என்றால் மாநில ஆணையத்திடம் சென்று புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

[ad_2]
Lankafire

Back to top button