இலங்கை செய்திகள்
Trending
சிங்கள அரசால் விரட்டப்பட்ட தமிழன்..! அநுரவின் மறுமுகம்…
சிங்கள அரசால் விரட்டப்பட்ட தமிழன்..! அநுரவின் மறுமுகம்...

சிங்கள அரசால் பதவி கிடைத்த 24 மணிநேரத்துக்குள் பதவி பறிக்கப்பட்டதாக மூத்த நிர்வாக அதிகாரியான செல்வின் இரேணியஸ் தெரிவித்துள்ளார்.
பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவியை பறித்ததாகவே அவர் கவலை வெளியிட்டார்.
மேலும், பதவியை பொறுப்பேற்கும் போது, ஒரு நாள் முதல்வர் போல இந்த பதவி தற்காலிகமானதுதான் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், அமைச்சர் கையொப்பமிட்டு வந்த அனுமதிக் கடிதத்தை அமைச்சர் தான் இரத்துச் செய்ய வேண்டும். எனக்கு அனுமதி கடிதம் கிடைத்த பின்னர் வேலை நாள் ஒன்றும் இருந்தது.
அப்போதே அறிவித்திருக்கலாம். ஆனால் நான் பொறுப்பேற்றதன் பின்னரே எனக்கு அறிவிக்கப்பட்டது என்றும் செல்வின் இரேணியஸ் குறிப்பிட்டார்.








