சாணக்கியன் ஆதரவாளர்கள் அடாவடி; அரியநேத்திரன் சொவரொட்டிக்கு மேல் சஜீத் சுவரொட்டி

[ad_1]
எனது ஊர் பழுகாமத்தில் தமிழ் பொதுவேட்பாளரின் சுவரொட்டியை மறைத்து தமிழரசுக்கட்சியை சேர்ந்த பழுகாமத்தை சேர்ந்த சாணக்கியன் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ளது.
ஒட்டியவர்கள் யார் என்பது எனக்கு தெரியும் நாகரீகம் கருதி அவர்களின் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்துள்ளேன்.
இந்த சுவரொட்டி ஒட்டும்போதும் தமிழ் பொதுவேட்பாளரின் சுவரொட்டியை கிழிக்கும்போதும் நான் படம் எடுத்துள்ளேன்.
கடந்த காலத்தில் 2010,2015,2019, மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழ்த்தேசியகூட்டமைப்பு முறையே சரத்பொன்சேகா, மைத்திரிபாலசிறிசேனா, சஜீத்பிரமதாசா மூவரையும் ஆதரித்தபோதும் அவர்களுக்கு ஆதரவாக தமிழ்த்தேசியகூட்டமைப்போ தமிழரசுகட்சியோ சிங்கள வேட்பாளருக்காக சுவரொட்டிகள் ஒட்டியவரலாறுகள் இல்லை.
இம்முறை சஜீத்தை ஆதரித்து சுவரொட்டிகளை தமிழரசுகட்சி ஒட்டுவது என்றால் சுமந்திரன் கும்பலின் மனோநிலையை புரிந்து கொள்ளலாம்.
அதுவும் ஒரு தமிழ் வேட்பாளரின் சுவரொட்டியை மறைத்து இப்படி சிங்களவரின் படத்தை ஓட்டுவதை தமிழ்மக்கள் உணரவேண்டும்.
இவற்றுக்கு எல்லாம் பொதுத்தேர்தலில் சாணக்கியன், சுமந்திரன் நல்ல பாடம் படிப்பார்கள் அப்போது தாம் தவறு செய்ததை உணருவார்கள்..
திருநாவுக்கரசு-பழுகாமம்
[ad_2]Lankafire







