கலை, கலாசாரம்

சமூக விஞ்ஞானப்போட்டியில் மட்டு மேற்கு இரண்டாம் நிலை

கிழக்கு மாகாணமட்ட சமூக விஞ்ஞானப்போட்டியில் வலய தரப்படுத்தலில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியாகிருந்தன. அவ்வகையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு முதலாம் நிலையினையும் ஐந்து இரண்டாம் நிலையினையும் ஒரு மூன்றாம் நிலையினையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு பாராட்டினையும் நன்றியினையும் மட்டக்களப்பு மேற்கு சமூகத்தினர் தெரிவித்துக்கொண்டனர்.

, சமூக விஞ்ஞானப்போட்டியில் மட்டு மேற்கு இரண்டாம் நிலை

Back to top button