கலை, கலாசாரம்
சட்டவிரோதமாக எருமை மாடுகளை கடத்திச் சென்ற மூவர் கைது!
சட்டவிரோதமாக எருமை மாடுகளை கடத்திச் சென்ற மூவர் கைது!

அநுராதபுரம், மடாட்டுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெவென்தென்னேகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக எருமை மாடுகளை லொறிகளில் கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக மடாட்டுகம பொலிஸார் தெரிவித்தனர்.
மடாட்டுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மூன்று லொறிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், கனேவல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 41, 49 மற்றும் 52 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று லொறிகளில் இருந்தும் சுமார் 49 எருமை மாடுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடாட்டுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








