இலங்கை செய்திகள்
Trending

புத்தளம் மாவட்டத்தில் தமிழர் அரசியலில்புதிய புரட்சி 

சம நிலம் கட்சி ஊடக தமிழ் தேசிய மக்கள் இயக்கம் களத்தில்

புத்தளம் மாவட்ட தமிழ் இனத்தின் விடியல் அரசியல் புதிய புரட்சி 

தமிழ் இனத்தின் நன்மை கருதி எமக்கான தனித்துவமான பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியுமான விதத்தில் புத்தளம் மாவட்ட வாழ் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

கறிவேப்பிலை போன்று வாக்கு தேவைக்காக மட்டுமே பயன்படுத்த பட்டு வந்த புத்தளம் மாவட்ட தமிழ் இனத்தின் வாக்கு வங்கியை ஒரு நிலை படுத்த வேண்டும். அதன் மூலமாக இத்தனைக் காலமாக நாங்கள் வெவ்வேறு மாற்றுத் தலைமைகளுக்கு தாரை வார்த்து கொடுத்து வந்த எமது வாக்குகளை இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த வகையில் தமிழ் இனத்தின் நன்மை கருதி எமக்கான தனித்துவமான பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியுமான விதத்தில் பயன்படுத்த வேண்டும். என்று இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்ட தலைமை வேட்பாளராக சம நிலம் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு செல்வநாயகம் நேசன் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப் பணத்தை செலுத்திய பின் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்.

புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மை இனமாக இருந்தாலும் தமிழ் இனத்தின் வாக்குகளை நாம் வெவ்வேறு மாற்றுத் தலைமைகளுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு எமக்கான உரிமை அரசியலில் கை ஏந்தும் நிலையில் இருந்து வந்தது என்பது வரலாற்று உண்மை. ஆனால் தற்போது புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை மாற்று தலைமைகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதை தவிர்த்து தமக்கான தனித்துவமான அரசியல் ரீதியான பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இப்பொழுது அந்த வாக்கு பலம் எமது மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் ஆகிய எம்மிடம் இருக்கும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் ஏமாற்ற அரசியலில் காவு கொள்ளப்பட்டு எமக்கான தனித்துவமான அரசியல் உரிமைகளை இழந்து போகாமல் சரியாக பயணிக்க வேண்டும்.

நாங்கள் இனவாத அரசியல் ரீதியான செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல தயாராக இல்லை என்றால் கூட கடந்த கால புத்தளம் மாவட்ட அரசியலில் கற்றுணர்ந்த இனவாத அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கூட்டணி என்ற இனவாத அரசியல் செயற்பாடுகள் மூலமாக எமது புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் கூட்டணி கட்சி மூலமாக தமிழ் இனத்தின் வாக்குகளை சூறையாடி இறுதியில். எம்மை ஓரங்கட்டிய துரோகம் நிறைந்த வரலாற்றை ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

இந்த முறை புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் இனம் சார்ந்து மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர், புத்திஜீவிகள், என அனைவரும் தமிழ் தேசிய மக்கள் இயக்கம் ஊடாக மேற்கொண்ட கலந்துரையாடல் மூலமாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்று இம்முறை தேர்தலில் புத்தளம் மாவட்ட தமிழ் இனத்தின் விடியல் அரசியல் நோக்கிய புரட்சி அரசியலில் குதித்து போட்டியிடும் தகுதியை பெற்று கொண்டது எமது உரிமை அரசியல் ரீதியான முதல் வெற்றி ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

எமது அரசியல் ரீதியான இந்த பயணம் வெறுமனே வாக்கு அரசியலை மட்டுமே மையமாக கொண்டது அல்ல மாறாக எம் இனத்தை சேர்ந்த வருங்கால தலைமுறை நலம் சார்ந்த விழிப்புணர்வை மையப் படுத்திய அரசியல் புரட்சி என்பதை நம் புத்தளம் மாவட்ட தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எமக்கான அரசியலில் இருந்து நாம் ஒதுங்கி இருந்ததால் தான் இத்தனைக் காலமாக அதே அரசியல் மூலமாக ஆளப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு வந்துள்ளோம். இனிமேலும் ஏமாற்று அரசியல் ரீதியான சூழ்ச்சியால் காவு கொள்ளப்படும் வரலாறு மாற்றம் அடைவதற்கு முயற்சி செய்வோம்.

புத்தளம் மாவட்ட தமிழ் இனத்தின் விடியல் அரசியலில் புதிய புரட்சி 

புத்தளம் மாவட்ட அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் இனத்தின் அரசியல் ரீதியான புரட்சி ஒன்றை தமிழ் தேசிய மக்கள் இயக்கம் சம நிலம் கட்சி ஊடக ஆரம்பித்து வைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கூடிய வகையில் தங்கள் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று புத்தளம் மாவட்ட வாழ் தமிழ் மக்களிடம் அன்பு உரிமையுடன் கேட்கின்றேன்.

நமக்கான பாதையை நாம் தான் உருவாக்க வேண்டும் அடுத்தவர் உருவாக்கும் பாதையில் பயணிப்பது மூலமாக நமக்கான தேவைகள் பூர்த்தியாகும் என்று கருதி இதுவரை சீரழிந்த தமிழ் இனத்தின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அடிப்பட்ட புலியும் ஒடுக்கப்பட்ட இனமும் திரண்டு எழுந்தாள் எந்த சக்தியும் அடக்கி ஆள்வது கடினம் என்பதை இந்த தேர்தலில் நாம் எடுத்துக் காட்டுவோம். புத்தளம் மாவட்ட தமிழ் இனத்தின் ஏகப் பிரதிநிதித்துவ பாராளுமன்ற உறுப்புரிமை கோரும் களத்தில் இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்ட தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை தபால் உறை சின்னத்திற்கு நேராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தபால் உறை சின்னத்திற்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளும் எம் இனத்தை தலை நிமிர்ந்து வாழ வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.என்றார்

Back to top button