கலை, கலாசாரம்

சகோதரிகளின் கணவர்களினால் 12 தடவைகள் பா லி ய ல் து ஷ் பி ர யோ க த் து க் கு ள் ளா ன சிறுமி !

மாத்தளை பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ள நிலையில் ஒருவர் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு சகோதரிகளின் கணவர்களினால் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக மாத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,

இந்த சிறுமி தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் 12 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்களான சிறுமியின் இரண்டு சகோதரிகளின் கணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்

மற்றையவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

, சகோதரிகளின் கணவர்களினால் 12 தடவைகள் பா லி ய ல் து ஷ் பி ர யோ க த் து க் கு ள் ளா ன சிறுமி !

Back to top button