கலை, கலாசாரம்
க.பொ.த பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு கொடுப்பனவு உயர்வு !

க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள்களின் மதிப்பிடுவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , கல்விக்கான அத்தியாவசிய பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலையை 2022 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டளவில் குறைக்க கல்வி அமைச்சு தலையிடும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
, க.பொ.த பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு கொடுப்பனவு உயர்வு !









