கொவிட் 19 தொற்று காலத்தில் மரணித்தவர்களின் சடலங்களை தகனம் செய்தமைக்காக அரசாங்கம் மன்னிப்புக் கோருகிறது !

கொவிட் 19 தொற்று காலத்தில் மரணித்தவர்களின் சடலங்களை தகனம் செய்தமைக்காக அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது. நீதி, வெளிவிவகார, நீர்வழங்கல் அமைச்சர்களான விஜேயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜீவன் தொண்டமான் ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொவிட் – 19 தொற்று காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில், வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு விதந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகிய 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.பின்னர் 2021 பெப்ரவரி மாதத்தில் அவ்வாறான நபர்களுக்கு மிகவும் மட்டுப்பாடுகளுடன் கூடிய அடக்கம் செய்வதற்கான
அனுமதி வழங்கப்பட்டது.
2021 ஜூலையில் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அப்போதிருந்த நீர் வழங்கல் அமைச்சால் ஆற்றுநீர், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்தநீர் உள்ளிட்ட கொழும்பு கண்டி நீரியல் பிரதேசங்களில் SARS –COV-2 வைரசை அடையாளம் காண்பதற்கான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.
ஆய்வின் பிரகாரம் மேற்புற நீரில் எவ்வித வைரசும் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டது.
2024 மார்ச் மாதத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் நீர் தொழிநுட்பத்துக்கான சீனா – இலங்கை ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மற்றும் மாதிரி நிலையத்தின் மூலம் இரண்டாவது கற்கையும் பூர்த்தி செய்யப்பட்டது.
, கொவிட் 19 தொற்று காலத்தில் மரணித்தவர்களின் சடலங்களை தகனம் செய்தமைக்காக அரசாங்கம் மன்னிப்புக் கோருகிறது !








