கலை, கலாசாரம்
கொழும்பு உட்பட பகுதிகளில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்!

[ad_1]
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதித் தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் காரணமாக நாளை (18) பல பிரதேசங்களில் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு நகரம், கொட்டாவ மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி பல பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கூட்டங்கள் நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
Lankafire








