கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

[ad_1]
கொழும்பு – கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூடு நேற்றிரவு (15-09-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத இருவர் படோவிட்ட 4ம் பிரிவில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து நபரொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
[ad_2]Lankafire








