கலை, கலாசாரம்
கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து… பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

[ad_1]
கொழும்பு – பாதுக்கை லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து முச்சக்கரவண்டிக்கு பின்னால் பேருந்து ஒன்று மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும் பின் இருக்கையில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தின் சாரதியும் காயமடைந்து பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
[ad_2]Lankafire







