இலங்கை செய்திகள்

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 வீதத்தால் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 வீதத்தால் குறைப்பு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கு அமைய  கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள  கருத்து தெரிவிக்கையில்,

“அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், ஒட்டோ டீசல் விலை  24 ரூபாவிலும் மற்றும் முன்பு 10 ரூபாவிலும் குறைக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 4 வீதத்தால் குறைப்பு

அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4 சதவீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எமது செயற்குழு தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Back to top button