கலை, கலாசாரம்

கொலைச் சம்பவம்… மாங்குளத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

[ad_1]

கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை வவுனியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்பகபுரம் பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலைசெய்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் சந்தியில் வைத்து சந்தேக நபர் நேற்று (03) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[ad_2]
Lankafire

Back to top button