கலை, கலாசாரம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலையில் மருத்துவ பட்டப்படிப்புக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு !

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மருத்துவப் பட்டப்படிப்புக்கான தராதரங்களுக்கு மாறாக மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக மேற்கொண்டுள்ள தீர்மானம், அடிப்படை மனித உரிமை மீறல் என கோரி பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம தலைமையிலான குழு, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தொடர்பான மனுவில் விடயங்கள் மறைக்கப்பட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்த்தன முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவு பிறப்பித்தது.

மன்றில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்ட நீதியரசர் குழாம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலையில் மருத்துவ பட்டப்படிப்புக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு !

Back to top button