கலை, கலாசாரம்

குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும் சட்டமூலத்தில் கையெழுத்திட்ட சபாநாயகர்!

[ad_1]

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தை 12.5 சதவீதத்தால் உயர்த்துவதற்கான சட்டமூலத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (12-09-2024) கையெழுத்திட்டார்.

அரசியலமைப்பின் 79 வது பிரிவின்படி, ‘தேசிய குறைந்தபட்ச தொழிலாளர் ஊதிய (திருத்தம்) மசோதா’ என்ற சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் அங்கீகரித்தார் என்று நாடாளுமன்றத்தின் ஊடக அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

திருத்தங்கள் மற்றும் வாக்கெடுப்பின்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

[ad_2]
Lankafire

Back to top button