கலை, கலாசாரம்

குருநாகல் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது யார்?

[ad_1]

குருநாகல், ரஸ்நாயக்கபுர, நம்முவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (19) அதிகாலை நம்முவாவ பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் இரத்தக் காயங்களுடன் கிடப்பதாக ரஸ்நாயக்கபுர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

உயிரிழந்தவர் 30 வயதுடைய நம்முவாவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணையில் குறித்த நபர் இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

[ad_2]
Lankafire

Back to top button