கலை, கலாசாரம்

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை; இளம் பெண்ணின் ஈவிரக்கமற்ற செயல்!

[ad_1]

சென்னை நந்தனம், சிஐடி நகர் அருகே , பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை குப்பைத் தொட்டியில், வீசிச் சென்றதாக கூறப்படுகின்றது.

குப்பைத் தொட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது.

அப்போது அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் குப்பைத் தொட்டி அருகே சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது.

உடனடியாக கலியபெருமாள் அருகில் உள்ள சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது இளம்பெண் ஒருவர் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[ad_2]
Lankafire

Back to top button