இலங்கை செய்திகள்
Trending

வாக்களிப்பின் பின்னர் 3 மணி நேரத்தில் வாக்கெண்ண தீர்மானம்

இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள்

 

பொதுத் தேர்தல் – வாக்களிப்பின் பின்னர் 3 மணி நேரத்தில் வாக்கெண்ண தீர்மானம்

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

அதற்கமையை, வாக்கு எண்ணும் நடவடிகைகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகும் வரையில் பொறுமையாக இருந்து தேர்தல் முடிவுகளை அவதானிக்குமாறும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், தேவையின்றி வெளியில் நடமாடுதல், கொண்டாட்டங்களில் ஈடுபடுதல் போன்ற அவசியமற்ற செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் வீடுகளிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை அவதானிக்குமாறும் அவர் அறிவித்தார்.

Back to top button