கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் இன்று 29.10.2024
காலை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களான தியாகராஜா யோகராஜா, அர்பா தாசிம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து உறுப்பினர் தியாகராஜா யோகராஜா குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
ஏனைய மாவட்டங்களிலும் இது போன்ற கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்த நேரமும் தங்களின் முறைப்பாடுகளை எமது ஐந்து பிராந்திய நிலையங்கள் ஊடாக முன்வைக்க முடியும் இதுவரை 21000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 15000 வரையான விண்ணப்பங்களுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் 6500 முறைப்பாடுகளுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்று அதற்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







