இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ஒபரேஷன் கொத்தமல்லி!

போக்குவரத்து பொலிஸாரின் சிறப்புமிக்க பணி

கிளிநொச்சி நகரில் ஒபரேஷன் கொத்தமல்லி!

வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விசேட செயற்பாடொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் ஒபரேஷன் கொத்தமல்லி! -5

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.

கிளிநொச்சி நகரில் ஒபரேஷன் கொத்தமல்லி! 1

இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு உறக்க நிலையை தணிக்க, கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள்.

கிளிநொச்சி நகரில் ஒபரேஷன் கொத்தமல்லி!-2

அந்த வகையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதி போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை சிறப்பு, ஒபரேஷன் கொத்தமல்லி!!
வரவேற்கத்தக்க அம்சம் என வாகன சாரதிகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.

கிளிநொச்சி நகரில் ஒபரேஷன் கொத்தமல்லி! -4

இந்நிலையில், கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸாரின் இச் செயற்பாட்டிற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

Back to top button