காணித் தகராறில் துப்பாக்கிச்சூடு; இலங்கையில் பயங்கரம்

[ad_1]
தலாவ, மெதகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (28) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
வராகொட, தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காயமடைந்தவர் தனது மைத்துனருடன் இணைந்து தனது காணியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது தண்ணீர் மோட்டார் தொடர்பில் அருகில் உள்ள மற்றுமொரு காணியின் உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபரான காணியின் உரிமையாளரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[ad_2]Lankafire








