இலங்கை செய்திகள்

காசோலை மோசடி அம்பலம்..! டக்ளசுக்கு எதிராக பிடியாணை…

காசோலை மோசடி அம்பலம்..! டக்ளசுக்கு எதிராக பிடியாணை...

காசோலை மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காசோலை, மோசடி, அம்பலம், டக்ளசுக்கு

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனினும் டக்ளஸ் தேவானந்தாவின் சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு மேலதிக நீதவான் விசாரணையை ஜனவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Back to top button